அரசு எடுத்துள்ள தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது – நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

சட்டமா அதிபரினால் வெளிப்படுத்தப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் மேற்கொள்ளவுள்ள சில திருத்தங்கள் நாடாளுமன்றத்திற்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
குறித்த விசாரணையின்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
செயற்குழு கூட்டத்தின்போது எடுத்த திருத்தங்கள் அடங்கிய எழுத்து மூலமான பத்திரம் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, “நாடாளுமன்றம் அந்த மாற்றங்களை ஏற்காது. எங்கள் வாதங்களை வர்த்தமானி செய்யப்பட்ட 20 ஆவது திருத்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
Related posts:
|
|