அரசியல் குழப்ப நிலையால் எதிர்கால சந்ததிக்கு ஆபத்து –  ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மகஜர்!

Saturday, December 1st, 2018

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையால் எமது நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான பாடசாலைக் குழந்தைகளின் வாழ்க்கை ஆபத்தான கட்டத்தில் உள்ளதென ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னோடியான செயற்பாடுகள் சிலவற்றில் இப்போதே குழப்பம் ஏற்பட்டு விட்டது.

மாணவர்களுக்கு சீருடை இலவசப் பாடப்புத்தகம் வழங்குதல், இலவச உணவு விநியோகம், பாடசாலைக்கான நிதி ஒதுக்கீடு செய்தல், புதிய ஆளணியின் நியமனம் போன்ற பல விடயங்கள்  முடங்கும் அபாய நிலை உள்ளது.

எத்தனையோ ஆயிரக்கணக்கான மாணவர்கள் அணிந்த உடைக்கு மாற்றுதல் இல்லாமல் இருக்கின்றனர். ஒரு வேளைக்கே உணவு இல்லாமல் வாழுகின்றனர். அப்பியாசப் புத்தகம் வாங்குவதற்கு வழியில்லாமல் தவிக்கின்றனர்.

ஆகையால் தற்போதைய குழப்பமான சூழ்நிலைக்கு விரைவில் தீர்வுகாணாவிட்டால் எமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.

எனவே விரைந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழலை வழமைக்குக் கொண்டு வருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் நாம் அங்கம் வகிக்கும் சர்வதேச கல்வியகத்தின் கவனத்திற்கும் கொண்டுசெல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு குறிப்பி;ட்ட மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பி அதன்  பிரதியை சர்வதேச கல்வியகத்தின் பொதுச் செயலாளருக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அனுப்பி வைத்துள்ளது.

Related posts: