அராசங்கத்தின் அடுத்த திட்டம் : மூன்று புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் !

Thursday, July 20th, 2017

நாட்டில் மேலும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், இலங்கையில் அரசு வழங்கி வரும் இலவசக் கல்வியைப் போலவே தனியார் கல்வியையும் ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகும்.அரச பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெறும் சகல மாணவர்களுக்கும் அங்கு அனுமதி வழங்குவதற்கு முடியாது.

எனவே, தனியார் நிறுவனங்கள் மூலம் அவர்களுக்கு வாய்ப்புகளைப் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.தனியார் மருத்துவக் கல்வியை குறுகிய நோக்கத்தில் பார்க்காமல் தொலைநோக்குடன் பார்க்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் அவ்வாறான பரந்த மனப்பான்மையின் மூலமே சிறப்பாக அமையும். எனவே, அரச பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காதவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் தங்களது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பளிப்பதில் எவ்வித தவறும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Related posts:


முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மத்திய அரசால் நேரடியாக செயற்படுத்தப்படுவதால் மாகாணத்தின் இருக்கின்ற அத...
மின் உற்பத்தியில் திருப்புமுனையை ஏற்படுத்தும்வகையில் புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஆரம்பிக்க நடவடிக்கை ...
3.4 பில்லியன் ரூபா பெறுமதியான தமிழக அரசின் மனிதாபிமான உதவிகள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று கையளிப்பு!