அரசியல் காரணிகளுக்காக நாம் ஒருபோதும் தேர்தல்களை ஒத்தி வைக்கப் போவதில்லை – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, February 2nd, 2022

தற்போதைய அரசாங்கமானது ஜனநாயக நடைமுறையை தெளிவாக நம்பி, அதனைப் பாதுகாக்கும் அரசாங்கமாக இருப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், நாட்டில் உள்ள அரசியல் சக்திகள் இணைந்து செயற்படவேண்டும் என்று நம்பும் அரசாங்கமாக தாம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் –

“மக்கள் விடுதலை முன்னணியானது, வீடுகளையும் மக்களையும் எரித்த வரலாற்றைக் கொண்ட கட்சி.

அண்மைய சேறு பூசும் தாக்குதல் ஜே.வி.பி உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட சண்டையாக அல்லது அவர்களுக்கு இடையேயான சண்டையாகக் கூட இருக்கலாம்.

இதன் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே இதை யார் செய்தார்கள் என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

இதேவேளை தேர்தல்களை ஒத்தி வைக்கக் கூடாது எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல்களை ஒத்தி வைப்பது எந்த வகையிலும் செய்யக் கூடாது. தற்போதைய கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் முதல் தடவையாக தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் எட்டு மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், அரசியல் காரணிகளுக்காக நாம் ஒருபோதும் தேர்தல்களை ஒத்தி வைக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: