அரசியல் கட்சிகள் தொடர்பில் புதிய சட்டம் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Saturday, July 6th, 2019
அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக நிபுணர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் உரிமையாளர்கள் தேர்தல் காலங்களில் தமது கட்சிகளை அதிகூடிய தொகைக்கு விற்பனை செய்கின்றமை குறித்து கடந்த வருடங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்போது, குறித்த கட்சிகளில் பதவிகளை வகிக்கும் நபர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயக அரசியலுக்கு பாரிய அச்சுறுத்தல் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து, அரசியல் கட்சிகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் துரிதமாக சட்டம் ஒன்றை உருவாக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
Related posts:
|
|
|


