அரசியலமைப்பு பேரவை எடுக்கும் முடிவுகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கும் இயலுமை நிறைவேற்று அதிகாரத்திற்கு இல்லை – அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024

அரசியலமைப்பு பேரவை எடுக்கும் முடிவுகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கும் இயலுமை நிறைவேற்று அதிகாரத்திற்கு இல்லை என நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியல் சாசன மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பன்னிப்பிட்டிய தெபானம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதில் சபாநாயகர் எடுத்த முடிவு சம்பந்தமாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர், அரசியலமைப்பில் திருத்தங்களை செய்து, அரசியலமைப்பு பேரவைக்கு 10 உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் சிறிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர் இதுவரை நியமிக்கப்படாமை பிரச்சினைக்கு காரணமாக உள்ளது.

இதனால், சபாநாயகர் செயற்பாட்டு ரீதியான சிக்கலை எதிர்நோக்கியுள்ளார்.

இதேவேளை சபாநாயகரின் முடிவில் ஏதேனும் சட்டரீதியான பிரச்சினை இருக்கின்றது என்று நம்பினால், அரசியலமைப்புச் சட்டப் பிரச்சினை தொடர்பான விளக்கத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய சிறந்த இடம் உயர் நீதிமன்றம் என குறிப்பிட்டுள்ளார்.

00

Related posts: