யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு – இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமென அவசர கோரிக்கை!

Friday, March 3rd, 2023

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில்,  அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் இதனால் இரத்த வங்கியில்  அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என இரத்த வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 28 ஆம் திகதி 49 சேகரிப்பும் , 49 வழங்கலும் இடம்பெற்றுள்ளது. 1 ஆம் திகதி 17 சேகரிப்பும் 48 வழங்கலும் இடம்பெற்றுள்ளது. 2 ஆம் திகதி 33 சேகரிப்பும் 39 வழங்கலும் இடம்பெற்றுள்ளது.

குறித்த புள்ளி விபரத்தின் படி சேகரிப்பை விட வழங்கல் கூடுதலாக காணப்படுகின்றது.  இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் இரத்த தான முகாம்களை ஒழுங்கமைப்பவர்கள் தமது  0772105375 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:


ஐ.நா விவகாரத்தை நாட்டின் தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் - அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அமைச்சர் ஜ...
நாளையதினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்...
பதவி விலகும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா - எதிர்வரும் முதலாம் திகதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பு...