அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று !

Friday, October 21st, 2022

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்றையதினம் நாடாளுமன்றில் இடம்பெற்றது. அது தொடர்பில் நேற்றையதினமும் விவாதம் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன ஆதரவு வழங்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றில் வைத்து தெரிவித்தார்.

எனினும், தேவையற்ற திருத்தங்களை உள்ளடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படின் அதற்கு ஆதரவு வழங்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமது கட்சி அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டத்திட்டம் ஆரம்பம் -...
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் - பதில் நிதியமைச்சர் ஷெ...
12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் - நிதி இர...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு பிரதமர் மஹி...
வியாழன்முதல் சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் - நிதி இராஜாங்...
சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!