அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்திய விவகாரம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 5 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்தியமைக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 5 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி பதிவு தொடர்பான தரவுகளை நீக்கிவிட்டு சொகுசு மகிழுத்து ஒன்றின் தரவுகளை உள்ளிட்டு, போலியான ஆவணங்களை பதிவு செய்து அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய வரியை இழக்க செய்துள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு குறித்த அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீண்டும் வரி அதிகரிப்பு!
சேவை காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பும் செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள் பிரதமருடன் சந்திப...
ஆசிரியர் கூகயீன விடுமுறை - யாழில் வெறிச்சோடிய பாடசாலைகள்!
|
|