அரசாங்கத்தின் நிதி முதன்மை கணக்கில் 21.9 பில்லியன் ரூபா மேலதிகம்!
Wednesday, January 10th, 2018
அரசாங்கத்தின் நிதி முதன்மை கணக்கில் 63 வருடங்களின் பின்னர் மேலதிகமாக நிதி தொகை இருப்பதாக நிதி அமைச்சுதெரிவித்துள்ளது.
இவ்வாறு ஏற்படக் காரணம் அரசாங்கத்தின் வெற்றிகரமான வருமான செலவு முகாமைத்துவமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய21.9 பில்லியன் ரூபா மேலதிகமாக பதிவாகியுள்ளது.
சுதந்திர இலங்கையில் முதன்முறையாக 1954 ஆம் ஆண்டிலேயே வரவுசெலவுத்திட்டத்தில் நிதி முதன்மை சுட்டிக்காட்டப்பட்டது.
இது மொத்த தேசிய உற்பத்தியில் 0.5 சதவீதமாகும். பின்னர் 1956ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 2.2 சதவீதமாக வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக காணப்பட்டதாகவும் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஜீ.எல்.பீரிஸிடம் குற்றப் புலனாய்வு விசாரணை!
நீரிழிவு மற்றும் புற்று நோய் மருந்துகளுக்கு பற்றாக்குறை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்...
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 6268 பேர் பாதிப்பு -524 பேர் இடைத்தங்கல் ...
|
|
|


