அரசாங்கத்தின் சில உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல்!

இலங்கையின் முக்கிய 3 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், இலங்கைக்கான சீன தூதரக அலுவலகத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவை மீள சீர்ப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை குறித்த இந்த இணையவழி முடக்கம் இடம்பெற்றதாக விமானப்படையின் இணையப் பாதுகாப்பு பிரிவு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு தகவல் வழங்கியதாக விமானப்படை பேச்சாளர் துசான் விஜேதிலக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போக்குவரத்துச் சேவையை இலகுபடுத்திய டக்ளஸ் தேவானந்தாவுக்கு நயினை பக்தர்கள் நன்றி தெரிவிப்பு!
இலங்கைக்கு உதவுவதற்கான தீர்மானம் தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றம்!
எந்தவொருவரது பதவி விலகல் கடிதமும் கிடைக்கவில்லை - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|