சிறுநீரக மோசடியில் சிக்கிய இந்தியர் நாட்டை விட்டு வெளியேறினார்!

Tuesday, May 24th, 2016
இலங்கையில், இந்தியர்கள் சிலரால் மேற்கொள்ளப் பட்டு வரும் சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட பின்னர் தப்பியோடிய இந்தியை பிரஜை, தற்போது இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக, போலிசார் இன்று கொழும்பு நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் சம்பந்தமாக அண்மையில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட எட்டு இந்திய பிரஜைகளை, நிதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் மிரிகானை பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.

அப்போது ஒரு இந்திய சந்தேக நபர் தப்பியோடியதாக போலீசார் அண்மையில் நிதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இன்று வழக்கு விசாரணையின்போது, இதுகுறித்த தகவல்களைத் தெரிவித்த போலீசார், தப்பியோடிய சந்தேக நபர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதை நீதிமன்றத்திட்கு அறிவித்தாக எதிர் தரப்பின் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் தெரிவித்தார்.

அந்த சந்தேக நபர், நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதை குடிவரவு திணைக்களத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறிய போலீசார், சந்தேக நபர் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் கருத்துக்களை தெரிவித்த போலீசார், இந்த சட்ட விரோத வியாபாரம் தொடர்ப்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்தனர்.

இதன்படி, தடுத்துவைக்கப் பட்டுள்ள மற்ற இந்திய பிரஜைகள் எழு பேரை எதிர் வரும் 31 ம் தேதி வரை விலக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றங்களை அறிவிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Related posts: