அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்ட்டுள்ளது.
பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான அஜித் ராஜபக்சவினால் இன்று வியாழக்கிழமை குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 21.11.2020 முதல் 21.09.2021 வரை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 30 அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச்.டி.ஈ.ஜனகாந்த சில்வா இந்த அறிக்கையைப் பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான அஜித் ராஜபக்சவிடம் நேற்று கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கல்வியமைச்சருக்கு எதிரான முறைப்பாட்டை விசாரணை செய்ய தீர்மானம்!
வறட்சியான காலநிலை : யாழ். மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!
நிலையான நைதரசன் முகாமைத்துவம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் திட்டத்தில் இலங்கை!
|
|