அமைச்சர் டக்ளஸ் முன்மொழிவு – அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை வங்களாவடி நகரம் மக்கள் பாவனைக்காக சம்பிரதாய பூர்வமாக திறந்துவைப்பு!

Saturday, April 2nd, 2022

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுக்கு இணங்க நகர அபிவிருத்தி அமைச்சால் நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை வங்களாவடி நகரம் இன்றையதினம் மக்களின் பாவனைக்காக சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திட்டத்ற்கு கீழ் பிரதமரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் இத்திட்டம் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுக்கு அமைவாக வேலணை வங்களாவடி நகரமும் நவீனமயப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வந்தது.

நிலையில் அபிவிருத்தி செய்யப்பட்ட தீவகத்தின் மையமான வேலவணை பிரதேசத்தின் வங்களாவடி நகரத்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் வேணை பிரதேச சபையின் உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அபிவிருத்தி செய்யப்பட்ட வங்கயாவடி நகரம் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

முன்பதாக வேலணை பிரதேசத்தினதும் மக்களினதும் பல்வேறு தேவைப்பாடுகளுக்கும் அபிவிருத்திகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது நகரின் அபிவிருத்தியின் தேவை கருதி குறித்த முன்மொழிவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரிடம் முன்வைத்திரந்தார்.

இந்நிலையிலேயே வேலணை வங்களாவடி நகரம் அபிவிருத்தி செய்யப்பட்டு இன்றையதினம் மக்களயின் பாவனைக்காக கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: