கப்பல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்த கப்பல் துறைமுகத்தை வந்தடைந்தது!
Thursday, October 6th, 2016
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்த இரண்டாவது கப்பலான சிலோன் ப்ரின்சஸ் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலை வரவேற்கும் நிகழ்வு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது. நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சிலோன் ப்ரின்சஸ் கப்பலை வரவேற்பதற்காக சர்வமத பிரார்த்தனைகளும் நடைபெற்றன. இந்த கப்பல் நிலக்கரிகளை ஏற்றிச்செல்வதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

Related posts:
சேனா படைப்புழு தாக்கத்திற்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி!
இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான யோசனைக்கு...
நாட்டுக்கு தேவையான பசளையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எட்டு நாடுகளிடம் கோரிக்கை - அமைச்சர் மகிந்த அ...
|
|
|


