அமைச்சர் டக்ளஸின் வரலாறு மக்களுடன் பின்னிப் பிணைந்து இருக்கின்றது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளர் ஐங்கரன் சுட்டிக்காட்டு!

Thursday, March 11th, 2021

எந்தவொரு திட்டங்களையும் மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் வெளியிடப்படும் சுற்று நிருபத்திற்கு அமையவே திட்டங்களை முன்னெடுக்க முடியும் என வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் பிரதேச நிர்வாக பொறுப்பாளர் இராமநாதன் ஐங்கரன் அத்தகைய சுற்று நிருபங்களில் அரசாங்க அதிபரால் மாற்றங்கள் ஏற்படுத்ப்படுவதற்கு அவருக்கு அதிகாரம் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

திட்டங்கள் அமுல்படுத்தப்படும் போது பல்வேறு குழறுபடிகள் மற்றும் மோசடிகள இடம்பெற்றுவருவது தொடர்பில் நேற்றையதினம் சபை அமர்வின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

சந்திரிகா அரசாங்கத்தால் தவிர்க்கப்பட்டிருந்த வடக்கு மாகாணத்துக்கான சமுர்த்தி நியமனங்களை யாழ் மாவட்டத்திற்கு 1998 ஆம் ஆண்டு அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவே கொண்டுவந்து அறிமுகப்படுத்தியிருந்தார். அன்றைய காலகட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த சம்பளம் மிகக் குறைந்தளவாகவே இருந்தது.

நியமனம் பெற்றவர்கள் பலர் உயிர் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டது மட்டுமல்லாது சுட்டும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தமது கடமைகளை சரியாக முன்னெடுத்து வந்திருந்தனர். அத்துடன் அதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இருந்திருக்கவும் இல்லை.

ஆனால் அது இன்று தலைகீழாக மாறியுள்ளது. அன்றைய காலகட்டத்தில் சூப்பியில் பால் குடித்துக் கொண்டிருந்தவர்கள். இன்று சமுர்த்தி உத்தியோகத்தர்களை மிரட்டுகின்றனர்.

கடந்த கால வரலாற்றை பற்றி கதைப்பதற்கான தகுதி இல்லாதவர்களும் வரலாறு இல்லாதவர்கள் தான் இன்று வரலாறு தொடர்பில் கொண்டிருக்கின்றார்கள்.

அதேநேரம் இன்று இருக்கின்ற தமிழ்த் தலைமைகளுக்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தமிழ் மக்களிடம் இருந்து பிரிக்க முடியாதவாறு அவரது வரலாறு மக்களுடன் பின்னிப் பிணைந்து இருக்கின்றது. அந்தவகையில் கடந்தகால வரலாறு தொடர்பில் கதைப்பதற்கு அவரைத் தவிர எவருக்கும் இன்று தகுதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2019 ஆம் ஆண்டிற்குரிய மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டங்கள் முழுமை அடையாமல் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் குறித்த திட்டங்களை பூர்த்தி செய்யாமல் மீண்டும் இவ்வருடம் தெரிவுசெய்யப்பட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதன்போது ஐங்கரன் வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ராஜாங்க அமைச்சின் ஊடாக மைதானங்கள் புனரமைக்கப்படும் திட்டத்தின் கீழ் புத்தூர் வளர்மதி விளையாட்டு கழகத்திற்காக 15 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ் வேலை திட்டங்களை ஆரம்ப நிகழ்வின் போது ஏற்பட்ட குழப்ப நிலை கவலைக்குரிய விடயம் என்றும் சடட்டிக்காட்டியிரந்த ஐங்கரன் இராமநறாதன் இவ்வாறான செயற்பாடகள் இனி எமது பிரதேசத்தில் நிகழ்வதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: