முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 28th, 2020

2021 ஆம் ஆண்டுக்கு அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்படிவம் கல்வி மற்றும் அறிவுறுத்தல்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலாம் தரத்துக்கு தமது பிள்ளைகளை அனுமதிக்க எதிர்பார்த்துள்ள பெற்றோர் கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய தயார் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை நிரப்பி, தமக்கு பொருத்தமான பாடசாலைகளின் அதிபர்களிடம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கும்படி பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே  இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்களுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சுகாதார அதிகாரிகள் இது தொடர்பில் தற்போது ஆராய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் போக்குவரத்துக்கள் என்பவை தொடர்பில் அவர்கள் ஆராய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் சமூக இடைவெளி தொடர்பிலும் அவர்கள் ஆராய்ந்துக்கொண்டிருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் பொதுபோக்குவரத்துக்களே சவாலாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் உரிய உறுதிப்பாடு கிடைக்காதுபோனால் பாடசாலைகளை திறப்பதில் எவ்வித பயன்களும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: