அமைச்சர்களை மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருத்து!

Wednesday, July 19th, 2023

இலங்கையின்  சுகாதாரத் துறையில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான மருந்து இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் வெளிவருவது இது முதல் முறையல்ல என்பதால் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

சுகாதார அமைச்சரை மாற்ற வேண்டுமா என வினவியமைக்கு, அமைச்சர்களை மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: