மக்கள் இயல்பு வாழ்வை எட்ட முடியாதிருப்பது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்ததல்ல – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினளர் தவநாதன்!

Wednesday, August 22nd, 2018

“போர் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் மக்கள் இன்னும் தமது இயல்பு வாழ்வை எட்ட முடியாத நிலையில் இருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது, மீள்குடியேற்ற காலம் தொடக்கம் இன்று வரை மக்கள் தொடர்ச்சியாக ஏதோ ஒரு விதமான சவால்களுக்கு முகம் கொடுத்தே வாழ வேண்டியுள்ளது; இந்த நிலைமை ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்ததல்ல.” என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்தார்.

கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞரணி உறுப்பினர்களுக்கான செயலமர் வொன்று சமீபத்தில் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஆதரவாளர்கள் முன் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

அடுத்த கட்டம் என்ன செய்வதென்று தெரியாத நிலையிலேயே பல குடும்பங்களின் வாழ்க்கை நகர்கின்றது. இது எமது எதிர்கால கல்வி வளர்ச்சியில் கூட பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றது. எதிர்காலங்களில் பல கல்வியியலாலர்களின் உருவாக்கம் கூட இதனால் தடைப்படுவதற்கும் சாத்தியம் உண்டு.

சரியான வழிகாட்டல்கள் இன்றி மக்கள் இன்று நுண் நிதிக் கடன் பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறான கடன் சுமைகளால்  ஏற்பட்ட உயிரிழப்புகளை மட்டுமே ஊடகங்கள் வெளியிடுகின்றன. ஆனால் இவ்வாறான கடன்களைப் பெற்ற ஒவ்வொருவரும் மிகுந்த துன்பங்களுக்கு மத்தியிலேயே மீளளிப்பு செய்து வருகின்றனர். சீரான தொழில்வாய்ப்பின்மையும் இதற்கு காரணமாக அமைகின்றன.

எனவே மக்களுக்கு ஏற்படும் இவ்வாறான இடர்பாடுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்களாக செயற்பாட்டாளர்கள் மாற வேண்டும். இதற்காகவே இவ்வாறான சந்திப்புக்கள் நடைபெறுகின்றன எனவும் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் மேலும் தெரிவித்தார்.

Related posts: