அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளது – சிறுவர்களின் சார்பில் கடமைகளை மீள ஆரம்பியுங்கள் – ஆசிரியர், அதிபர்களிடம் அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள்!
Sunday, September 5th, 2021
இலங்கை அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் சம்பள பிரச்சினை குறித்து அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளதால் சிறுவர்களின் சார்பில் ஆசிரியர்களும் அதிபர்களும் தங்கள் கடமைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் எவ்வாறான நிலைப்பாடுகளை முன்னெடுத்தாலும் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள கடினமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான ஆசியர்களும் அதிபர்களும் இணையவழி கற்கைக்கு திரும்புவார்கள் என அவர் நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் அமைச்சரவை அங்கீகரித்துள்ள நிலையில் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்வது எனஅதிபர் ஆசிரிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி சொந்தவிடத்தில் ஆரம்பம்
ஏற்றிய பட்டமே எமனாகியது இளைஞனுக்கு: புத்தூரில் சோகம்!
நியூசிலாந்துக்கு அருகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!
|
|
|


