நியூசிலாந்துக்கு அருகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!
Friday, March 5th, 2021
நியூசிலாந்து நாட்டின் வடக்குத் தீவுக்கருகே நேற்றைய தினம் ரிக்டர் அளவீட்டு கருவியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கம் அந்நாட்டின் பல பாகங்களிலும் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியை அண்மித்த கடற்பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதுடன்,சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்,நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியை அண்மித்த இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
எதிர்வரும் திங்கள்முதல் அனைத்துத் தபால் நிலையங்களும் திறக்கப்படும் - தபால் மா அதிபர் அறிவிப்பு!
இலத்திரனியல் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் - ஒடிசா விபத்துக்கு காரணமானவர்கள்...
இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் சில சரத்துக்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானம் - அமைச்சரவையில் த...
|
|
|


