அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Tuesday, September 13th, 2022
எதிர்வரும் நாட்களில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சராக தேனுக்க விதானகமகே தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்ட போது அதில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இராஜாங்க அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள், நாடாளுமன்ற உறுப்பினருக்கான வேதனத்தை மாத்திரமே பெற்று செயற்படுகின்றனர்.
மட்டுப்படுத்தபட்ட அளவிலேயே அவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உயர்தரக் கல்வியில் புதிதாக உள்வாங்கப்படும் பாடங்கள் !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் ஒரு நாளில் 40 கொரோனா தொற்று மாதிரி சோதனை - யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதா...
சிறப்புத் தேவையுடையவர்கள் மற்றொரு நபரின் உதவியைப் பெற அனுமதிக்கப்படுவர் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவ...
|
|
|


