அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கின்றது அரசு!
Friday, July 14th, 2017
அமெரிக்காவுடன் 2007ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் இலங்கை பாதுகாப்புப் பணியகத்திடையே 2007ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தமானது கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானது. இதன் ஆயுட்காலம் 10 வருடங்களாக இருந்தது.
இந்நிலையிலேயே உலக பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டும், சர்வதேச உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கிலும் இந்த ஒப்பந்தத்தை மேலும் சில வருடங்களுக்கு நீடித்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுபற்றி அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தியுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|
|


