அபாய மட்டத்தை எட்டியது இரணைமடு குளம் – அனைத்து வான் கதவுகளும் திறக்கப்படுள்ளதாக தாழ்நில பகுதி மக்களிற்கு எச்சரிக்கை!
Monday, January 11th, 2021
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் 12 அங்குல அளவில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிக நீர் வரத்து காணப்படுவதால் படிப்படியாக வான் கதவுகள் திறக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் நீர்பாசன திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
குளத்தின் மொத்தமாக உள்ள 14 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் நீர் வெளியேற செல்லுகின்ற தாழ்நில பகுதியில் உள்ள கிராமங்களான பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை போன்ற கிராமங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்கும்படி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிலையான மட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை முன்னெடுக்க நடவடிக்கை!
யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் : கைதான மாணவர்களுக்கு பிணை!
அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - வெளியானது விசேட வர்த்தமானி!
|
|
|


