அபாயம் மிக்க 6 மாவட்டங்களை தவிர்து ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை நீக்கப்படும் ஊரடங்கு சட்டம்!

Wednesday, April 8th, 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 அணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

அதற்கமைய நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் பரவலின் அபாய வலயங்களாக கருதப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையை தவிர்த்து வேறு மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.

Related posts: