பெற்றோல் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, May 27th, 2022

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து, பெற்றோலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது, 20,598 மெட்ரிக் டன் டீசல், 1,778 மெட்ரிக் டன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது.

42,750 மெட்ரிக் டன் 92 ரக ஒக்டேன் பெற்றோல், 6,579 மெட்ரிக் டன் 95 ரக ஒக்டேன் பெற்றோல், 3,104 மெட்ரிக் டன் ஜெட் ஏ1 ரக எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றையதினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக, விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது.

நேற்றையதினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலுக்கு இலங்கையில் எரிபொருளை வழங்க முடியாமையால், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த எரிவாயு கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜத ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமைமுதல், எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும். எனவே, 3 நாட்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: