அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்க விஷேட ஏற்பாடு – இலங்கை போக்குவரத்து சபை !

Sunday, April 26th, 2020

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், கொழும்பு மாவட்டத்தின் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக முறையான போக்குவரத்து சேவைகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் சேவைகளை ஆரம்பிக்க விரும்பும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஒவ்வொரு வழியிலும் பயணிக்க எதிர்பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் நிறுவனங்களின் தகவல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க முடியும் என்றும் இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம், இலங்கை போக்குவரத்து சபைக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி dgmoperation@sltb.lk என்ற மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் பிரகாரமே பஸ்களில் பயணிக்கவும் அனுமதியளிக்கப்படும் என போக்குவரத்துஅமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் வீட்டிலிருந்து வெளியேறுவது தொடர்பில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட காலப் பகுதியில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை பயன்படுத்துவோர் சமூக இடைவெளி பேணுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து கவனம் செலுத்தியே இவ்வாறு அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த நடைமுறையை பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts: