அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவை – இந்திய அரசுடன் கலந்துரையாடல் நடைபெறுவதாக இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை, தலைமன்னார் மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் உட்பட பல்வேறு மூலோபாய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டடது.
இதன்போது கடல்சார் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை முன்னேற்றுவதற்கும், இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதற்கும் இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது கடல்சார் மற்றும் விமான சேவைத் துறைகளில் ஈடுபட ஆர்வமுள்ள இந்திய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கப்பல் மற்றும் சிறிய கைவினைக் கட்டுமானத் தொழில்களுக்கான சாத்தியக்கூறுகளை வலியுறுத்தி, திருகோணமலை துறைமுகப் பகுதியில் முதலீட்டு வாய்ப்புகளை அவர் முன்னிலைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|