தன்னிச்சையாக செயற்படுவதை கைவிட்டு மக்களுக்கு சேவையை செய்ய  முன்வாருங்கள் – ஈ.பி.டி.பியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் வசந்தறூபன்!

Tuesday, June 26th, 2018

தன்னிச்சையாக செயற்படுவதை விடுத்து அனைவரையும்  ஒருங்கினைத்து செயற்பட்டால் மட்டுமே எம்மால் ஒத்துழைக்க முடியும்  இல்லையேல் சபை அமர்வுகளாக இருந்தாலும் ஏனைய சந்திப்புகளாக இருந்தாலும் வெளிநடப்பு செய்வதைவிட வேறு வழியில்லை  என ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் பச்சிளைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினர் வே.வச ந்தறூபன் தெரிவித்துள்ளார்.

பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கு முறையாக அழைப்பு விடுக்காததுடன் கலந்துரையாடல் விடயம் பற்றிய அறிவிப்பும் இன்றி வெறுமனே கலந்துரையாடல் என  கூறப்பட்டதாகவும் இதன் காரணமாக  எதிர்கட்சிகளின் வேறு சில உறுப்பினர்கள் சமூகமளிக்காத காரணத்தால் விடயத்தை தெளிவுபடுத்தி தானும் வெளிநடப்பு செய்ததாகவும் வசந்தறூபன் தெரிவித்தார்.

தொடர்ச்சியாகவே பல தடவைகள்  இவ்வாறு பச்சிளைப்பள்ளி தவிசாளர் தன்னிச்சையாகவே செயற்பட முனைந்து வருவதாகவும்  தொடர்ச்சியான அவரது செயற்பாட்டை   தாம் கண்டிப்பதாகவும்   அவர் தெரிவித்தார். வசந்தறூபனின் வெளியேற்றத்தின் பின் சபையில் எதிர்கட்சியில் அமர்ந்திருந்த எஞ்சிய ஒரு உறுப்பினரும் வெளியேறியிருந்தார் இதனையடுத்து ஆளும்கட்சி உறுப்பினர்கள் மட்டும் கலந்துரையாடலை நடத்தியதாக தரிவிக்கப்படுகிறது

Related posts: