டெங்கு ஒழிப்புவார செயற்றிட்டங்களுக்கு மக்கள் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 2nd, 2016

நாட்டில் உயிர்கொல்லி நோயான டெங்கின் தாக்கம் மீண்டும் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பாதுகாப்பு செயற்றிட்டங்களுக்கு பொதுமக்கள்

முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இம்மாதம் 29ஆம் திகதிமுதல் ஏப்ரல் 04ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரமா கசுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்கப்பட்டுள்ளது

டெங்கிலிருந்து மக்கள் ஒவ்வொருவரும தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தாம் வசிக்கும் வீடுகளையும்,சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருத்தல், நீர் தேங்கிநிற்கக்கூடிய மற்றும் நுளம்புகள் பெருகக்கூடியதுமான இடங்களை அடையாளங்கண்டு அவற்றை முற்றாக அழித்தல் போன்ற செயற்றிட்டங்களில் இதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் எமது மக்கள் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு ஒழிப்புவார செயற்றிட்டங்களுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது.

எனவே மக்கள் இதனை உளப்பூர்வமாக உணர்ந்துகொண்டும் ஏற்றுக்கொண்டும் தமக்கான சமூகப்பணியாகவும் கடமையாகவும் செய்ய முன்வரவேண்டும்.

இவ்வாறான துரிதசெயற்பாடுகளினூடாகவே உயிர்கொல்லி நோயான டெங்கிலிருந்து நம்மைநாமே பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

இதுவிடயத்தில் துறைசார்ந்த அரசஅதிகாரிகளும் கடமை மற்றும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகுமென்றும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாணசபை வாய்ப்பேச்சுடன் மட்டும் நின்றுவிடாது மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் செயற்படவேண்டியது அவசியமானதென்றும் சுட்டிக்காட்டினார்

Related posts: