அனுரவுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் கடிதம் – திங்கள்முதல் மீண்டும் வடக்கு  நோக்கிய சேவையில் யாழ் தேவி!

Saturday, October 19th, 2024

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்தேவி தொடருந்தை அன்றையதினம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது தொடருந்து சேவை முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை வடக்கின் பயணிகளது அசௌகரியங்கள் மற்றும் நலன்கள் கருதி குறித்த சேவையை காங்கேசன்துறை வரை வழமைபோன்று மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி வந்த நிலையில் அண்மையில் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவுக்கு எழுதிய பல்வேறு மக்கள் நலன்கருதிய விடயங்கள் அடங்கிய கடிதத்திலும் குறித்த விடயத்தை வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த புகையிரத சேவை காங்கேசன்துறைவரை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: