அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி – பொலிஸாரால் மீட்பு!

Monday, June 17th, 2024

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது –

அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிசார் மேற்படி பெட்டியை மீட்டுள்ளனர்

மேற்படி பெட்டியினுள் தொலைத் தொடர்பு கருவி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

000

Related posts:

விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மட்டுமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு...
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கவில்லை - தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைச...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - தேசிய டெங்கு நோய் க...