அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு!
Wednesday, January 18th, 2023
மின்சாரம் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன், இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மின்சார வழங்கலுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும், கனியவள உற்பத்திகள், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக உள்ளன.
அத்துடன், வைத்தியசாலைகள், தாதிய இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாகன இறக்குமதிக்கு தடை !
மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
கொரோனா வைரஸ்: சந்தேகிக்கப்பட்ட 311 இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!
|
|
|


