அதிவேக நெடுஞ்சாலையில் விசேட சுற்றிவளைப்பு!
Saturday, April 17th, 2021
அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் வாகன சாரதிகள் அவதானமாக செயற்பட வேண்டும்.
குறிப்பாக பண்டிகை விடுமுறைகளுக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணிப்பவர்கள் வீதி சட்டங்களை உரிய முறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அவ்வாறு வீதி சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரிகளை அறவிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் - கசப்பான மருந்தாக இருந்தாலும், இதனை அருந்தவேண்டிய நி...
எதிர்வரும் பெரும்போகத்திற்கு தயாராகுமாறு விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு அறிவுறுத்து!
காங்கேசன்துறை - நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாகக் காணப்படுகின்ற முறைப்பா...
|
|
|


