அதிவேகம் – கட்டுப்பாட்டை இழந்து கல்லுண்டாயில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து குடைசாய்ந்தது!
Thursday, August 12th, 2021
இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர் சாலைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் -காரைநகர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து இன்றுகாலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில் கல்லுண்டாய் வீட்டுத்திட்ட பகுதியில் வீதியில் பயணித்த காரைநகர் – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தினை முந்த முற்படுகையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே பாய்ந்து குடை சாய்ந்தது
கல்லுண்டாய் வீதியின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த பகுதியில் இன்றுகாலை பெய்த மழையின் காரணமாக வழுக்கல் நிலை காணப்பட்டதாகவும் வேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் விபத்தை நேரடியாக பார்த்தோர் தெரிவித்தனர்.
ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த பேருந்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாகவும் மேலும் குறித்த வீதியில் ஒவ்வொரு நாளும் குறித்த பேருந்தானது மிகவும் வேகமாகவே பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


