தொலைக்கல்வி முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத மாணவர்களுக்கு கிராமிய கற்றல் மையங்களை அமைக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு!

Monday, June 21st, 2021

கொரோனா பரவல் காரணமாக, முறைப்படுத்தப்பட்ட தொலைக்கல்வி முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத மாணவர்களுக்காக, கிராமிய கற்றல் மையங்களை அமைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொலைக்கல்வி முறைமைக்கான வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு, பிரதேச கற்றல் மையங்களை அமைக்குமாறு, அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சிறு குழுக்களாக இணைந்து இந்த மையங்களில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியும். இதற்கமைய, குறித்த கற்றல் மையங்களை கிராமிய மட்டங்களில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: