நிதி வழங்கலை நிறுத்த வேண்டாம் – ஐ.நா. பொதுச் செயலாளர் அமெரிக்காவிடம் கோரிக்கை!

Wednesday, April 15th, 2020

சர்வதேச நாடுகளை கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்தையும் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் குறித்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட வேறு பல அமைப்புக்களும் கடுமையாக போராடி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்ரேஸ் தெரிவித்துள்ளார்.

எனவே இது போன்ற தருணங்களில் குறித்த அமைப்புக்களுக்கு வழங்கும் நிதியை குறைப்பது என்பது சரியான முடிவாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர், அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஐ.நா பொதுச்செயலாளர் குறித்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

Related posts: