ரஷ்யப் போர்க்கப்பல் கொள்வனவு மோசமான விளைவை ஏற்படுத்தும்

Friday, November 10th, 2017

நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து போர்க்கப்பலை கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று இலங்கை இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொகான் பலேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மைத்துனரான பலேவத்த இலங்கை இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றியபோதே இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் போர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்ட நிலையில் அதிக விலை கொண்ட போர்க்கப்பல் அவசியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இலங்கை கடற்படைக்காக 158.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றைக் கொள்வனவு செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளார் என்று ரொகான் பலேவத்த கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: