வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் தொழில்நுட்பக்கோளாறு!

Wednesday, October 9th, 2019


வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவில், தற்போது மின்னணு ஆவண சான்றுறுதிப்படுத்தல் கணினி செயற்பாடுகளில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவில், தற்போது மின்னணு ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையில் (e-DAS) மெதுவாக நகரும் கணினி அமைப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்ப கோளாறு, அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு எடுக்கும் நேரத்தை அதிகரித்துள்ளதுடன், அன்றாட சேவைகளில் நெரிசலை தோற்றுவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது இந்த சிக்கலை நிவர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், தொழில்நுட்பக் குறைபாடு சரிசெய்யப்படும் வரை ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என, சான்றளித்தல்களை பெற்றுக்கொள்வதற்கு கொன்சுலர் விவகாரங்கள் பிரிவுக்கு வருகை தரும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts: