அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
 Saturday, October 28th, 2017
        
                    Saturday, October 28th, 2017
            
யாழ்.வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள அதிபர் வெற்றிடங்களுக்கு யாழ்.வலயத்தில் கடமையாற்றும் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்தே வகை iii, பாடசாலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நிபந்தனைகள்
வகை iii பாடசாலைகளுக்கு தற்போது அதிபர் சேவை வகுப்பு 3 இனைச் சேர்ந்த அதிபர்களும், தற்போது அதிபர் சேவை வகுப்பு 3 போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று நியமனத்தை ஏற்றுக் கொண்ட அதிபர்களும் விண்ணப்பிக்க முடியும்.
1 யா/கதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் ௲ வகை 3
2 யா/சிறுப்பிட்டி இ.த.க பாடசாலை ௲ வகை 3
3 யா/நீர்வேலி தெற்கு இ.த.க பாடசாலை ௲ வகை 3
இவ் விண்ணப்பங்கள் நேர்முகப் பரீட்சைக்குழு ஒன்றின் மூலம் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பப்படிவங்களை யாழ்.கல்வி வலயத்தில் பொது நிர்வாகக் கிளையில் பெற்று பூர்த்தி செய்து எதிர்வரும் 13.11.2017 ஆம் திகதிக்கு முன்னர் வலயக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்.வலயக்கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        