அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான பிரச்சினைக்கு அடுத்தவாரம் தீர்வு – அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவிப்பு!
Tuesday, August 24th, 2021
அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான பிரச்சினைக்கு அடுத்தவாரம் தீர்வு அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்..
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர்−ஆசிரியர் தமது பிரச்சினை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானமொன்று எட்டப்படாத பட்சத்தில், தாம் வலுவான தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியிருந்த நிலையிலேயே, அரசாங்கம் இன்று (24) இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினம் யாழ்ப்பாணத்தில்!
சீரற்ற காலநிலை: வேகமாக பரவும் நோய் - உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல்!
கொவிட் பரவலை கட்டுப்படுத்த விரைவில் கொள்கை ரீதியான தீர்மானம் - சுகாதார அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு!
|
|
|


