இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினம் யாழ்ப்பாணத்தில்!
Monday, August 15th, 2016
இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது.
இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இன்று காலை 9.00 மணியளவில் இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன் இந்தியத் தேசியக் கொடியினை ஏற்றி, குடியரசுத் தலைவரின் சுதந்திர தினச் செய்தியை வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனின் இன்னிசைக் கச்சேரி நிகழ்த்தப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் கரகாட்டம் மற்றும் பாடல்களும் இசைக்கப்பட்டன. இந்நிகழ்வில், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள், வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், பாடசாலை மாணவர்கள், தூதரக ஊழியர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
Related posts:
நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாதள்ளதாம் - சந்திரிக்கா!
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கான தீர்வும் வழங்கப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக...
|
|
|


