சீரற்ற காலநிலை: வேகமாக பரவும் நோய் – உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல்!

Friday, December 20th, 2019

இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.

அந்த வகையில் தற்போது குளிருடனான காலநிலை தொடர்வதால் இன்புளுவன்சா வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நோய் தாக்கத்தின் அறிகுறிகளாக காய்ச்சல், தடிமன், இருமல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், 2 வயதிற்கு குறைந்த குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் இதயம், கல்லீரல், சிறுநீரகம், நீரிழிவு, புற்றுநோய்களுக்கு இலக்கானவர்கள் விரைவாக இன்புளுவன்சா வைரஸ் நோயின் தாக்கத்திற்கு ஆளாவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: