வித்தியா கொலைச் சந்தேகநபர்களை விசேட அனுமதியுடனேயே சந்திக்கலாம் – நீதவான் உத்தரவு 

Monday, March 28th, 2016

 கூட்டுப் பாலியல் வல்லுறவின் பின் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில், ஐந்தாம், ஆறாம்  சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் விசேட அனுமதியைப் பெற்றால் மாத்திரமே  சந்திக்க முடியும் எனவும், சாதாரணமாகச் சந்திக்க முடியாது எனவும் ஊர்காவற்துறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால்  உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு இன்று திங்கட்கிழமை(28-03-2016)  நீதிவான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது மேற்படி சந்தேக நபர்களுடன் கதைக்க வேண்டும் எனும் கோரிக்கையை குறித்த சந்தேகநபர்கள் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி கோரினார். இதன்போதே, ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் இவ்வாறு தெரிவித்தார்.

டி.என்.ஏ அறிக்கை மற்றும் சான்று பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கைள் என்பன குற்றப் புலனாய்வுப்  பொலிஸாரால் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் குறித்த வழக்கை  எதிர்வரும் ஏப்ரல் மாதம்- 11ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துத் தீர்ப்பளித்தார்.

 

Related posts: