அமெரிக்க கப்பலில் இலங்கை கடற்படையினர்!
Wednesday, July 27th, 2016
கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும், அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமுன்தினம்(24) மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் நிலையில், சிறிலங்கா கடற்படையினருடன், அனர்த்த கால மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக, இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையினர் பயிற்சி அளித்து வருகின்றனர். அத்துடன், அமெரிக்க- சிறிலங்கா கடற்படையினருக்கிடையில், கூடைப்பந்து, எல்லே உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இருநாட்டுக் கடற்படையினருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை -சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்...
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர் - இராஜாங்க அமைச்சர்...
NPP, சைக்கிளில் ஒருவர் எதிர்ப்பு - மேலதிக 12 வாக்குகளால் நிறைவேறியது வேலணை பிரதேச சபையின் பாதீடு!
|
|
|


