அதிக வெப்பநிலை – இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை!
Thursday, April 1st, 2021
வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும்.. வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த 4 மாவட்டங்கள் உள்ளடக்கம்..
இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் தீவிர எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 4 மாவட்டங்கள் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது.
குறித்த மாவட்டங்களில் வெப்பநிலை 32 பாகை செல்சியஸில் இருந்து 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும், பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அஞ்சல் சேவையாளர்கள் ஒன்றியம் பணிப்புறக்கணிப்பு!
வடக்கில் சுட்டெரிக்கும் வெயில்: 20 நிமிடங்களுக்கு ஒரு தடைவ கட்டாயம் தண்ணீர் குடியுங்கள் - மருத்துவப...
புதுவருட விருந்துபசாரங்களை குடும்பத்தினருடன் மட்டுப்படுத்துங்கள் - பொதுமக்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அ...
|
|
|


