அதிக விலையில் அரிசி விற்கப்படுமாயின் கடுமையான சட்ட நடவடிக்கை!
Friday, February 10th, 2017
இன்னும் ஒருவார காலத்தினுள் தற்போதைய நிர்ணய விலையில் நாடு பூராகவும் அரிசி விற்கப்படும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள அரிசியின் நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலையில் அரிசி விற்கப்படுமாயின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விசேட திட்ட அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
வழமையான விளைச்சல் குறைவடைந்து இம்முறை 40 தொடக்கம் 50 வீதமான விளைச்சலே பெறப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாரல் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts:
பொலிஸ் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை - பொலிஸ் மா அதிபர்!
சூரியகாந்தி செய்கையினை விரிவாக்குங்கள் - இலங்கையின் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்கு இந்தியா பூரண ஒத...
பொருளாதார நெருக்கடி - தொலைபேசி பயன்பாட்டிலும் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்!
|
|
|


