அதிக விலைக்கு சிமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!

Saturday, December 11th, 2021

சிமெந்து நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் அதிக விலைக்கு சிமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு மூடை சிமெந்துக்கு நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் அதிகபட்ச சில்லறை விலை 1,275 ரூபாவாகும்.

எனினும், அந்த விலையை விட அதிக விலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிமெந்து மூடைகள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதேநேரம் சிமெந்துப் பொதியில் அச்சிடப்பட்ட விலைக்கே விற்பனை நிலையங்களுக்கு சிமெந்து வழங்கப்படுவதால் தாம் குறித்த விலையில் விற்பனை செய்வதில் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் கடந்த காலங்களில் தமக்கான இலாபத்திற்கான கழிவு வழங்கப்பட்டே விநியோகிக்கப்பட்டதாகவும் அது தற்போது இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: