குறைந்த பரிசோதனை மதிப்பீட்டால் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைவு என வெளியான செய்திக்கு சுகாதார அமைச்சு மறுப்பு!

Wednesday, March 9th, 2022

குறைந்த கொரோனா பரிசோதனை மதிப்பீடு காரணமாக நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனக் கூறப்படும் செய்திகளுக்கு பதிலளித்துள்ள சுகாதார அமைச்சு, அப்படி எதுவும் இல்லை எனலும் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சோதனைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படுவது இயல்பானது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளரான ரஞ்சித் பதுவன்துடாவ டெய்லி மிரரிடம் தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையும் போது, தொடர்புகளின் எண்ணிக்கையும் குறைகிறது, இதன் விளைவாக குறைவான எண்ணிக்கையிலான சோதனைகள் உள்ளன. இது நேர்மாறாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உண்மையான நோய்த்தொற்றுகளின் மொத்தக் குறைப்பின் விளைவாக தொடர்புகளின் எண்ணிக்கை குறையும் போது பிசிஆர் மற்றும் அன்டிஜென் சோதனைகள் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மார்ச் 7 ஆம் திகதி இறப்பு எண்ணிக்கையானது எட்டாக சரிவடைந்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், பூஸ்டர் டோஸ் வழங்கும் செயற்பாடானது இலங்கையில் 50 சதவீதத்தைத் தாண்டிய நிலையில், இறப்பு மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அத்துடன் நாளாந்தம் தற்போது 1,000 க்கும் குறைவாகவே தொற்றாளர்களின் எண்ணிக்கையே தற்போது பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: