அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென்பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளனர் – தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு!

Monday, December 25th, 2023

மாகாண சபை மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென்பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பெண்கள், இளைஞர்கள், யுவதிகள் என அனைவரும் தொடர்ச்சியான அரசியலில் பங்குபற்ற வேண்டும்.  தற்போது மறைக்கப்பட்டுள்ள தேர்தல் செயற்பாடுகள் குறித்து மக்களை அறிவூட்டுவதன் மூலம் மக்களுக்கு மாகாண சபை குறித்து தெளிவூட்ட முடியும்.நாட்டின் அபிவிருத்திக்கு மாகாணசபை அதிகாரம் பரவலாக்கப்படல் வேண்டும்.

தென்பகுதி மாகாண சபை கட்டமைப்பினை விட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகள் குறித்த முறைமையில் விருத்தி கண்டுள்ளதாகவும், நிர்வாக அதிகாரங்கள் மட்டுமன்றி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் அதற்கு நாம் இணங்க வேண்டும்.

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பது பிரஜைகளாகிய எம் அனைவரதும் பொறுப்பாக அமைவதாகவும், மாகாண சபை மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென் பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளனர் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: